அதிமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி - எல்லாம் முடிஞ்சு போச்சு என கோவையில் வானதி சீனிவாசன் பதில்

திமுக கூட்டணி குறித்து வி.பி. துரைசாமி பேசியது குறித்த கேள்விக்கு, எல்லாம் முடிஞ்சு போச்சு என கோவை விமான நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


கோவை: கோவையில் SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிர்மலா சீதாராமன் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்- வானதி சீனிவாசன்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜக வினர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமனை வழியனுப்பி வைத்தார்.



பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நேற்று ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு 3749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

அதில் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும்.

தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்க வில்லை என சொன்னார். அவரது கோரிக்கையும் கேட்கபட்டது.

அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களான பொள்ளாச்சி ஜெயராமன் , அமல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சினைகளுக்காக நிதியமைச்சரை சந்தித்தனர். இது அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

கோவையில் SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

நேற்று நடந்த தனியார் கல்லூரி நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம். காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை.

மேலும் கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதியமைச்சர் மகிழ்வாக இருந்தார். அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை.

தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும்.

நேற்று சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை.மாநிலத் தலைவர் இல்லாமல் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம். அதிமுக கூட்டணி குறித்து விபி துரைசாமி பேசியது குறித்த கேள்விக்கு, எல்லாம் முடிஞ்சு போச்சு என பதிலளித்துவிட்டு வானதி சீனிவாசன் சென்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...