திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு மாணவர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு - கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தமிழ் வளர்ச்சி துறையால் நடத்தப்படும் 2023-24ம் ஆண்டிற்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: திருக்குறள் ஓப்பிவித்தல் போட்டிக்கு விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்

தமிழ் வளர்ச்சித் துறையால் 2023-24 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கு ரூ.15,000- பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண் குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப்பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ்வளர்ச்சி இயக்குநருக்கு கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணைஇயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0422-2300718 என்ற அலுவலகத் தொலைபேசி எண் அல்லது 99405 90165 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15-12-2023-க்குள் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், பழைய கட்டடம் - முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் என்ற முகவரிக்கோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...