அண்ணாமலை விரைவில் குணமடைய பிரார்த்தனை - கோவையில் மண்சோறு சாப்பிட்ட பாஜக நிர்வாகிகள்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவை மாவட்ட பாஜகவினர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டும் அங்கப் பிரதர்ஸ்ணம் செய்தும் வழிபாடு நடத்தினர்.


கோவை: அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவையில் மண்சோறு சாப்பிட்டு பாஜக நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவரது நடைப்பயணம் 6ம்தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அண்மையில் தெரிவிக்கப்பட்டது.



இதனால் அண்ணாமலையின் நடை பயணம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் ஆலோசனைப்படி தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் செல்வகுமார், ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலையில் பாஜக தொண்டர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டும் கோவில் வளாகத்திற்குள் அங்க பிரதோஷணம் செய்தும் வேண்டிக்கொண்டனர். பின்னர் அண்ணாமலை விரைவில் குணமடைந்து வர வேண்டிய சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...