அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் - கோவையில் உயிர்காக்கும் மருந்துகளை வழங்கிய பாமகவினர்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும் உயிர்காக்கும் மருந்துகளை இலவசமாக பாமகவினர் வழங்கினர்.


கோவை: அன்புமணி ராமதாசின் பிறந்தாளை பாட்டாளி மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.

நாடாளுமன்ற உருப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55வது அகவையில் அடியெடுத்து வைக்கின்றார். அவரது பிறந்தநாளை பாட்டாளி பிறந்தநாளினை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.



பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையிலான பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செல்வபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் உட்பட கோவை மாநகரில் மூன்று முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டாடினர்.



மேலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உள்ள பல தரப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு மாரடைப்பு வந்தால் உடனடியாக உட்கொள்ள வேண்டிய உயிர் காக்கும் மாத்திரைகள்( Loading dose) வழங்கினர்.

இது குறித்து கோவை பாமக கிழக்கு மாவட்ட் செயலாளர் கோவை ராஜ் கூறுகையில் உயிர் காக்கும் மருந்துகள் தனிப்பட்ட முறையில் வாங்க வேண்டும் என்றால் சுமார் 75 ரூபாய் வருகிறது இந்த மருந்துகளை டாக்டர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையிலே முக்கிய இடங்களிலே இலவசமாக மருந்துகள் வழங்கி வருகின்றோம் இன்று மட்டும் 300 பேருக்கு மருந்து இலவசமாக வழங்கப்படுகின்றது அடுத்த கட்டமாக ஒவ்வொரு பகுதிகளாக சென்று எல்லோருக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கிட உள்ளோம் என்று தெரிவித்தனர். இதில் கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ், மகளிர் அணி செயலாளர் கெளசல்யா, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மடத்தூர் ரமேஷ் மற்றும் கோபி உள்ளிட்ட பாமகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...