துடியலூரில் உள்ள டியூகாஸ் நிறுவனத்தில் ஊழல் - உறுப்பினர்கள் வாக்குவாதம்

கோவை துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி சில உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: டியூகாஸ் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு செயலாட்சியர் சிவக்குமார் தான் பொறுப்பு எனவும் கூறி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூரிலுள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ் நிறுவனம்) இந்தியாவில் 2வது பெரிய கூட்டுறவு விவசாய நிறுவனமாகும். இங்கிருந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விவசாய உரங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில் இன்று டியூகாஸ் நிறுவனத்தில் சிறப்பு பேரவைக்கூட்டம் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்கள் 2023-ன்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையில் உள்ளதுபடி, டியூகாஸ் நிறுவனத்தில் உள்ள உறுப்பினர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் இணைத்தல், இறந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், கூட்டுறவுச் சங்கங்களின் சட்டவிதிகள் அடிப்படையில் தயார் செய்து, நிறுவனத்திலுள்ள இறுதி உறுப்பினர்கள் பட்டியலை அங்கீகரிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.



அப்பொது கூட்டத்தில் கலந்துக்கொண்ட சில உறுப்பினர்கள் டியூகாஸ் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு செயலாட்சியர் சிவக்குமார் தான் பொறுப்பு எனவும் கூறி விவாதம் செய்தனர். மேலும் டியூகாஸ் நிறுவனத்தில் தற்காலிக வேலை செய்பவர்களின் சம்பளத்தை உயர்த்த தரக்கோரி கடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இதுநாள் வரை சம்பளம் உயர்த்தப்படவில்லை என்று கூறியும் செயலாட்சியர் சிவக்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செயலாட்சியர் சிவக்குமார் பேசும்போது, எந்தவிதமான தவறும் டியூகாஸ் நிறுவனத்தில் நடைபெறவில்லை என்றும், டியூகாஸ் நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது என்றும், தற்காலிக வேலை செய்பவர்களின் சம்பளம் உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், அதன்பிறகு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இருந்தும் கூட்டம் கடும் விவாதத்துடன் நடைபெற்றது. இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...