வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு - தாராபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை ஆலோசனைக் கூட்டம்

தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார் என்று ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் புகார் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



ஸ்ரீ ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீரமங்கை குயிலில் நினைவேந்த நிகழ்ச்சி குறித்து செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கூறுகையில், தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார்.

விடுதலைப் போராட்ட வீரர் பொன்மானுக்கு மணிமண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியும் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. மணிமண்டபம் கட்ட இடத்தை தேர்வு செய்து உடனடியாக மணிமண்டபம் கட்டும் பணியை துவக்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அண்ணாமலை பாதையாத்திரை என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறார். பெயரை ஏற்ப தமிழ்நாட்டில் அண்ணாமலை என்ன பேசுகிறார் என்று கேட்கக்கூட ஆள் இல்லை. ஏனென்றால் அண்ணாமலையின் பேச்சு கேலிக்கூத்தாக மாறிவிட்டது அண்ணாமலையின் பாதையாத்திரை வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...