அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மிதிவண்டி போட்டிகள் - தேதி அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 14ஆம் தேதி கோவையில் மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நடைபெறும் மிதிவண்டி போட்டிகளில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 14ஆம் தேதி காலை 8 மணிக்கு அண்ணா மிதிவண்டி போட்டிகள் கோவை புதூர் மின்வாரிய அலுவலகம் முன்பு துவங்கி ஆர்டிஓ அலுவலகம், CBM கல்லூரி வழியாகச் சென்று மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்.

இப்போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை மாவட்ட பிரிவு மூலம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 10 கிலோமீட்டர், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 15 கிலோமீட்டர், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 15 கிலோமீட்டர் என நடத்தப்பட உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ் ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000 இரண்டாம் பரிசாக ரூ. 3000, மூன்றாம் பரிசாக ரூ. 2000, நான்கு முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ. 250 ரூபாய் மதிப்பிலான பரிசுகளும், தகுதி சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...