கோவை அருகே மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழப்பு


கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஆனைகட்டி கிராமம் தமிழக, கேரள எல்லையான இங்கு அதிகமான யானைகள், சிறுத்தை காட்டெருமைகள் உள்ளன. இந்நிலையில் ஆனைகட்டி ஆர்நாற்காடு கிராமம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டப்பகுதியில் சிறுத்தை இறந்து நிலையில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த வனத்துறையினர் சோதனை நடத்தியதில் சிறுத்தையின் உடல் அருகே மாடு ஒன்று இறந்து கிடப்பதால் மாட்டில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது மாட்டை வேட்டையாடும் போது சிறுத்தை இறந்ததா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் இறந்தது மூன்று வயது மதிக்க தக்க பெண் சிறுத்தை என்றும், உயிரிழப்பின் காரணம் பிரேத பரிசோதனையின் முடிவில் தெரியும் என கூறினர். இதே பகுதியில் கடந்த ஜனவரி மாதம் சிறுத்தை கடித்து நான்கு ஆடுகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...