உடுமலையில் சத்தி வாராஹி அம்மன் கோவில் நவசண்டியாகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி சத்தி வாராஹி அம்மன் கோவிலில் நவசண்டியாக விழா சிறப்பாக நடைபெற்றது


திருப்பூர்: உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வேண்டி வாராஹி அம்மனை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பூர் உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி கந்தசாமி கார்டனில் சித்தி விநாயகர், சக்தி வாராஹி அம்மன் கோவில் உள்ளது.



இந்தக் கோவிலில் நவசண்டியாக விழா நடைபெற்றது. விழாவின் முதல் நாள் நிகழ்வாக காலை கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது.

மாலை சங்கல்பம், கலச வழிபாடு, நவாயரி ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது. 2-ம் நிகழ்வாக காலை 9 மணியளவில் நவசண்டியாகம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுமங்கலி, கன்னியா, வடுக பூஜையும், வஸோத்தாரை யாகம், பூர்ணாஹூதி நடைபெற்றது.

கடுமையான தோஷம் உள்ளவர்கள், கிரக நிலை மாற்றம், தீய சக்திகளில் இருந்து விடுபட, பெயர் புகழ் வெற்றி அடைய, எதிரிகள் ஒழிந்து காரிய வெற்றி அடைய நவசண்டியாகம் செய்யப்படுகிறது.



இதன் மூலம் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, துர்கா தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து

கொண்டு வழிபாடு செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...