குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் பெற்ற கோவை மாநகர மேயர்

மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மேயர்‌ தகல்பனா ஆனந்தகுமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.


கோவை: பொதுமக்கள்‌ அளித்த கோரிக்கை மனுக்களின்‌ மீது உடனடி நடவடிக்கை எடூக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அலுவலா்களுக்கு மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌ உத்தரவு.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதாக்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாண்புமிகு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளாரகள்‌ க.சிவகுமார்‌, செல்வசுரபி ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.

இக்கூட்டத்தில்‌ மேயரிடம் மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோந்த பொதுமக்கள்‌ 59 நபர்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.



இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 5 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 9 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 5 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 9 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 23 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 8 மனுவும்‌, ஆகமொத்தம்‌ 59 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இம்மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்கள்‌.

இக்கூட்டத்தில்‌, உதவி ஆணையா்‌ (வருவாய்‌) (பொ) தமிழ்வேந்தன்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தாராஜ்‌, உதவி ஆணையர்‌ ருள்வாகம்‌ (பெ) மாணிக்கம்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ சந்தியா, நூார்‌அகமது(பொ), ஜே.பிரேம்‌ஆனந்த்‌, மகேஷ்கனகராஜ்‌, செந்தில்குமரன்‌, செயற்பொறியாளாரகள்‌, உதவி செயற்பொறியாளாகள்‌, உதவி நகரமைப்பு அலுவலாகள்‌, உதவி பொறியாளார்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலா்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...