மேற்கு மாவட்டங்கள் கொடுக்கும் நிதியை செலவிடுவது நியாயமா? - வானதி சீனிவாசன் கேள்வி

அனைவருக்கும் சம நீதி கிடைக்க பாடுபட்டு வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை குறை கூறுவதை திமுக அரசு கைவிட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.


கோவை: 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு நிதி கிடைத்ததைவிட பல மடங்கு அதிகம் இப்போது பாஜக ஆட்சியில் கிடைத்துள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அக்டோபர் 10-ம்தேதி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “2014 -15 முதல் 2021-22 வரை மத்திய அரசின் நேரடி வரியில், தமிழ்நாட்டின் பங்கு ரூ. 5.16 லட்சம். ஆனால், இந்த காலகட்டத்தில் மாநிலங்களுக்கான வரி பகிர்வாக தமிழ்நாட்டிற்கு கிடைத்தது ரூ.2.08 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், உத்தரப்பிரதேசத்திற்கு அவர்களின் பங்களிப்பை விட அதிகமாக நிதி கிடைத்துள்ளது" என மத்திய அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இதே குற்றச்சாட்டை திமுக கூறி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதை பேசாத நாளே இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசை குறை கூறுவதையே திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு தானும் விதி விலக்கல்ல என்பதைத்தான் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேச்சும் அமைந்துள்ளது. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

கடந்த 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்கிய வரி பங்கீடு ரூ. 2.46 லட்சம் கோடி. அத்துடன் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய உதவித் தொகை ரூ.2.30 லட்சம் கோடி. இது தவிர தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல்நிதியையும் சேர்த்து 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ரூ. 10.76 லட்சம் கோடி. இந்த உண்மைகளை மறைத்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தியுள்ளார்.

ஆனால், 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்ததைவிட பல மடங்கு அதிகம் இப்போது பாஜக ஆட்சியில் கிடைத்துள்ளது. பாஜக ஆட்சியில் வழங்கப்பட்ட நிதி விவரங்களைக் கூறும் நிதியமைச்சர், 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைத்த நிதி விவரங்களை சொல்ல தயங்குவதேன்?

சிறந்த அரசு நிர்வாகம் என்பது, வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு ஊக்கம் கொடுத்து, அந்த மாநிலங்களையும் முன்னேற்றுவதுதான். அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி பெற்றால்தான் நாடு வளர்ச்சி பெறும். இதனால்தான் பதவியேற்ற நாள் முதல், 'மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி' என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசி வருகிறார்.

அந்த அடிப்படையில்தான் அதிக மக்கள் தொகை கொண்ட, பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊக்கம் கொடுத்து வருகிறது. அதற்கு பெரும் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. அப்படி மத்திய அரசால் ஊக்கம் கொடுக்கப்பட்ட மாநிலங்கள் வேகமாக முன்னேறி வருவதை ஜி.எஸ்.டி வசூல் காட்டுகிறது.

தொழில் வளம் இல்லாத வடகிழக்கு மாநிலங்களுக்கும் மத்திய அரசு சிறப்பு கவனம் கொடுக்கிறது. இதை திமுக எதிர்க்கிறதா? பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடா? இதை அவர்களது கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஏற்கிறதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டிலேயே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்துதான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. அந்த நிதியைத்தானே மற்ற மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இதைத்தானே மத்திய அரசும் செய்கிறது.

தொழில் வளர்ச்சி இல்லாத மாநிலங்கள், மாவட்டங்களை ஒதுக்க நினைப்பது சமூக அநீதி. தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் விவசாயம் மிகமிக குறைவாகவே உள்ளது. தொழில் நிறுவனங்கள் இல்லாத, நாம் வளர்ச்சி அடையாத மாநிலங்கள் என பட்டியலிட்டு வரும் மாநிலங்களில் இருந்துதான் உணவுப் பொருட்கள், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கும் கிடைக்கிறது.

எனவே, அனைவருக்கும் சம நீதி கிடைக்க பாடுபட்டு வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை குறை கூறுவதை திமுக அரசு கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...