உடுமலை அருகே அரசு துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின் படி உடுமலை ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட பள்ளி கட்டமைப்பு வசதி முக்கியம் என மேலாண்மை குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அதன் படி உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். உடுமலை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அக்டோபர் மாத கருப்பொருள்கள் பற்றி கலந்து உரையாடினார்.

குறிப்பாக உப குழுக்கள் அமைப்பது, பள்ளி மாணவர்களை விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது பற்றியும், பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும் பள்ளிக்கு இந்த வருடம் வழங்கப்பட்டுள்ள மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தில் இருந்து செலவிடப்பட்ட விவரங்கள் பற்றியும், வண்ணமயமான நாற்காலிகளும் மேசைகளும் ஒன்று முதல் 3-ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாங்கப்பட்டு உள்ளதையும் மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட பள்ளி கட்டமைப்பு வசதியும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...