2017- 18 ஆண்டிற்கான தமிழக பட்ஜட்டை வரவேற்பதாக சைமா தலைவர் கே.கே.ராஜன் தகவல்

தமிழக அரசின் 2017- 18 ஆம் ஆண்டிற்கான பட்ஜட் வெளியீடானது வரவேற்கத்தக்கதாக உள்ளது என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசின் புதிய பட்ஜெட்டில் 150 கோடி ரூபாய் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோவையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க தமிழக அரசிற்கு சைமா சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் 7 ஆயிரம் கோடி கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்நாட்டில் விவசாயிகளுக்கு தேவையான பம்புசெட்டிகளின் விற்பனை அதிகரிக்கும்.

மேலும், புதிய தொழில்முனைவோர் இணையதளம் மூலம் கடன்பெறும் திட்டத்தின் மூலம் அவர்களது வேலைப்பளு மற்றும் நேரம் விரையமாவது குறையும்.

தமிழக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் நல்ல வளர்ச்சியை எட்ட முடியும். கோவை மாநகரத்திற்கும் சிறப்பு கவணம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

மேலும், கோவையில் புதிய தொழிற்பேட்டைகளை நிறுவ மற்றும் ஒருவழித் திட்டம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனுமதி கொடுக்கும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பிரத்யேக சிறிய மற்றும் நடுத்தர நிறுவன வர்த்தக வளாகங்களை அமைக்க வேண்டும் என தனது அறிக்கையின் மூலம் சைமா தலைவர் கே.கே.ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...