உடுமலையில் பாஜக சார்பில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி - பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.


 திருப்பூர்: பாஜக கடந்த 9 ஆண்டுகளாக செய்த சாதனைகளை விளக்கும் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூர் நகரில் செல்வ விநாயகர் கோவிலில் பாஜக மாநில தலைமை அறிவுறுத்தல் படி பாஜகவின் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக செய்த நலத்திட்டங்களான மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், இந்து மதத்தின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று இணையவேண்டும் என பேசபட்டது.



இந்த நிகழ்வில் ஆர் எஸ் எஸ் விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து முன்னணி காரியகர்த்தாக்கள் மற்றும் காவி சொந்தங்கள் உடுமலை நகர பாஜக பொறுப்பாளர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட அணி பொறுப்பாளர்கள் நகர பாஜக பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல உடுமலை நகராட்சிக்குட்பட்ட எரிப்பாளையம் கங்காதரன் லேஅவுட் காந்தி சவுக் பழனியாண்டவர் நகர் நெடுஞ்செழியன் காலனி நெல்லுக்கடை வீதி உட்பட 33 வார்டுகளிலும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் சார்பில் கூடுவோம் கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...