டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் போராட்டம் நடத்தினர்

தாராபுரத்தை அடுத்த தேர்பாதை டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும் என பொது மக்களும், அகற்ற கூடாது என வணிகர்களும் போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.


திருப்பூர்: பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கெத்தல்ரேவ் பிரிவு தேர்பாதையில் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது‌.தேர்பாதை டாஸ்மார்க் கடையால் இடையூறு இருப்பதாக கூறி கடந்த வாரம் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



இந்நிலையில் இதே அரசு மதுபான கடையால் அருகில் உள்ள வியாபார நிறுவனங்கள் மளிகை கடை உணவகங்கள் மருந்தகம் செல்போன் கடை கோழிப் பண்ணைகள் விவசாயம் கால்நடை வளர்ப்பு அனைத்தும் நல்ல முறையில் செயல்பட்டு கொண்டு உள்ளது. ஆகவே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

டாஸ்மார்க் மதுபான கடையை இடமாற்றம் செய்தால் இப்பகுதியில் உள்ள மளிகை கடை உணவகங்கள் மற்ற இதர நிறுவனங்கள் வியாபாரம் பாதிப்பு ஏற்படும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.



தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் மூலனூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...