திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் குதித்து உயிரிழந்த 2 பேர் - அடையாளம் கண்டது காவல்துறை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் குதித்து உயிரிழந்தவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் போலிசார் ஓப்படைத்தனர்.


திருப்பூர்: புற்றுநோயால் அவதியடைந்த கணவன் மனைவியுடன் கால்வாயில் குதித்து தற்கொலை.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாளவாடியை பூர்வீகமாகக் கொண்டவர் கோவிந்தராஜ்(80). இவருக்கு சாந்தாமணி(75) என்ற மனைவியும் ராதா, மகேஷ் என்ற மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ராதா என்பவர் கோவை மாவட்டம் சூலூரிலும், மகேஷ் என்பவர் உடுமலையிலும் வசித்து வருகின்றனர். தம்பதியர் இருவரும் மகள்கள் வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கோவிந்தராஜ்க்கு புற்றுநோய் ஏற்பட்டதாக தெரிகிறது.

அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று தனது மனைவி சாந்தாமணியை அழைத்துக்கொண்டு திருமூர்த்திமலைக்கு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் காண்டூர் கால்வாயில் குதித்து தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடல் திருமூர்த்தி அணையில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்கள் இருவர் குறித்த தகவலும் போலீசார் தரப்பில் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் தற்போது இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தெரியாத பரிசோதனைக்கு பின்பு அவர்களது உடல் மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...