உடுமலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தளி பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


திருப்பூர்: தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உடலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு தனிப்படை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்சண்முகமூர்த்தி, தலைமை காவலர் கோவிந்தராஜு ஆகியோர் தலைமையில் காவலர்கள் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தளி பேரூராட்சியை சேர்ந்த டிரைவர் செல்வகுமார்(43) என்பவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.மேலும் அவரிடமிருந்து கணேஷ், பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் 45.7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...