உடுமலையில் போன்சாய் மரங்கள் கண்காட்சி - மாணவர்கள் ஆர்வம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் பள்ளி, அறக்கட்டளை இணைந்து போன்சாய் மரங்களின் கண்காட்சி நடைப்பெற்றது.


திருப்பூர்: மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் போன்சாய் மரங்கள் கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் பள்ளி, அறக்கட்டளை இணைந்து போன்சாய் மரங்களின் கண்காட்சி நடைப்பெற்றது. உடுமலை இன்னர்வில் சங்கம், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் போன்சாய் சங்கங்களின் உறுப்பினர்கள் இக்கண்காட்சியினை பார்வையிட்டனர்.



இதனை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு குறிப்பு எடுத்து கொண்டனர்.



போன்சாய் என்பது தோற்றத்தை ஒரு ஒப்பனை அலங்காரத்திலிருந்து இயற்கையாகவே பசுமையான அலங்காரமாக மாற்றுகிறது. அவை அழகாக இருப்பது மட்டுமல்லாமல், பல மறைமுகமான நன்மைகளையும் கொண்டுள்ளன.



போன்சாய் மரங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும். ஜப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" எனப் பொருள்படும் என்று பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போன்சாய் மரங்களின் சிறப்பினை அறக்கட்டளை நிறுவனர் நந்தினி ரவீந்திரன் விளக்கி கூறினார்.



மேலும் இதில் கீழ்கண்ட 100க்கும் போன்சாய் மரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.



தனியார் பள்ளி மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...