உடுமலை அருகே இலக்கிய மன்ற விழா துவக்கம் - மாணவர்கள் ஆர்வம்

உடுமலை அடுத்த பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, தமிழ் கூடல்விழா, கலை இலக்கிய வெற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அருகே அரசு பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் மாணவர்கள் பங்கேற்பு.

உடுமலை அடுத்த பெரிய வாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா, தமிழ் கூடல்விழா, கலை இலக்கிய வெற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியை அ. ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். வரலாற்று ஆசிரியை பி.மாலா வரவேற்புரை வழங்கினார்.

முதுகலை தமிழ் ஆசிரியை வி.ஜானகி இலக்கிய மன்றத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி எடுத்து உரைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் செ. சரவணன் தமிழ்மொழியின் தொன்மையும் மொழியின் சிறப்புகளும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

இதையடுத்து கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பரிசுகள் வழங்கினார். மாணவ மாணவிகள் சங்க இலக்கிய பாடல்களையும் பாரதியார் பாரதிதாசன் போன்ற தமிழ் புலவர்களின் பாடல்களை குழுவாக சேர்ந்து பாடினார்கள்.நிறைவாக ஆசிரியை ஆர்.பார்வதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...