கோவையில் ரயிலில் ஹெராயின் கடத்தி வந்த வாலிபர் கைது - ரூ.5.6 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

கோவையில் அசாம் திப்ருகார்–கன்னியாகுமரி ரயிலில் ரூ.5.6 லட்சம் மதிப்பிலான ஹெராயினை கடத்தி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


கோவை: யிலில் ஹெராயினை கடத்தி வந்த வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவையில் கோவை ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுபாப்பு படை போலீசார், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து கோவை வரும் ரயில்களில் சிறப்பு சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து கோவை வந்த அசாம் திப்ருகார்–கன்னியாகுமரி ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகம்படும் படி இருந்த வாலிபரை பிடித்து, அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் ரூ.5.6 லட்சம் மதிப்பிலான, 70 கிராம் ஹெராயின் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் அசாமை சேர்ந்த வாசிம் அக்ரம்(23) என்பதும், அசாமில் இருந்து கேரளாவிற்கு ஹெராயினை கடத்தி செல்வதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஹெராயினை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...