உடுமலை வட்டார அளவிலான கலைத் திருவிழா நிறைவு - பரிசுகளை அள்ளிய மாணவர்கள்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி உடுமலையில் 3 நாட்கள் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா நிறைவு பெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களிடையே உள்ள கலை இலக்கிய நடன திறமைகளை வெளிக் கொணரும் பொருட்டு கலை திருவிழா மாநிலம் முழுவதும், முதல் கட்டமாக பள்ளி அளவிலும், இரண்டாம் கட்டமாக வட்டார அளவிலும், மூன்றாம் கட்டமாக மாவட்ட அளவிலும், நான்காம் கட்டமாக மாநில அளவிலும் நடத்தப்படுகிறது.



அதன் அடிப்படையில் இந்த கல்வியாண்டுக்கான உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா கடந்த அக்டோபர் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களில் உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.



நிறைவு நாளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான அனைத்து போட்டிகளும் நடைபெற்றது.

உடுமலை வட்டார அளவிலான கலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்.

உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், மனோகரன், ஆறுமுகம் ஆகியோர் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர். குறிப்பாக பேச்சுப்போட்டி, விவாத மேடை, களிமண் உருவங்கள் செய்தல், காய்கறி பொம்மைகள் செய்தல், கிராமிய நடனம், தனி நடனம், செவ்வியல் நடனம், இசை வாய்ப்பாட்டு, கட்டுரை போட்டி, கையெழுத்துப் போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது.



போட்டிகளில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலுகின்ற சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் செய்திருந்தனர். போட்டி ஒருங்கிணைப்பாளர்களாகவும், நடுவர்களாகவும் உடுமலை வட்டார ஆசிரியப் பெருமக்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி திறமை வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். நிறைவாக கலைத்திருவிழாவின் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் ராம் பிரசாத் நன்றி கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...