உடுமலையில் சர்வதேச நிலவு நோக்கும் இரவு - மாணவர்கள் ஆர்வம்

சர்வதேச நிலவு நோக்கும் இரவு நாளையொட்டி திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியான உடுமலையில் நிலவு நோக்கு இரவு நடைபெற்றது. அதில் மாணவ மாணவிகளுக்கு வானவியில் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் சர்வதேச நிலவு நோக்கும் இரவு நாளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ம் தேதி சர்வதேச நிலவு நோக்கும் இரவாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி உடுமலையில் நிலவு நோக்கு இரவு நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர் கணேஸ்வரி தலைமை தாங்கினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், வானவியல் பற்றியும், வானவியல் சார்ந்த படிப்புகளைப் பற்றியும், வானவியலில் ஆர்வம் உள்ளவர்கள் எவ்வாறு தங்களது மேல்படிப்பினை தேர்வு செய்தால் வருங்காலங்களில் இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக வர முடியும் என்பது பற்றி மாதிரி பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.



தொடர்ந்து நிலவைப் பற்றிய 30க்கும் மேற்பட்ட சுவாரஸ்ய தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது, சந்திராயன் ஒன்று, இரண்டு, மூன்று ஆகியவற்றினுடைய நோக்கம், சந்திராயன்-3 வெற்றி உலக நாடுகளின் வரவேற்பை பெற்றுள்ளது பற்றியும், மங்கள்யான் செயற்கைக்கோள் எவ்வாறு அனுப்பப்பட்டது என்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்தார். குறிப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிவித்தார்.

தொடர்ந்து உடுமலை கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள், ஆசிரியர் சதீஷ்குமார், கல்லூரி மாணவிகள் ஹரிணி, மதுஸ்ரீ ஆகியோர் தொலைநோக்கிகள் வழியே சனிக்கோளினை வளையங்களுடனும், வியாழன் கோளையும், குறிப்பாக நிலவினை அதனுடைய மேடு பள்ளங்களுடன் தெளிவாக மாணவர்களுக்கு காண்பித்தனர்.

மாணவர்களின் பெற்றோர்களும் முதல்முறையாக தொலைநோக்கி வழியே நிலவை கண்டு ரசித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சயின்ஸ் சொசைட்டி சார்பாக திருப்பூர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தொலைநோக்கி பயன்படுத்தி கோள்களையும் நிலவினையும் மாணவர்களுக்கு காண்பித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...