தூய்மை பணியாளர்கள் போராட்டம் - கோவையில் தேங்கிய குப்பைகள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகரில் குப்பைகள் தேக்கமடைந்துள்ளது.


கோவை: தொடரும் துய்மை பணியாளர்கள் போராட்டத்தால் கோவை மாநகரில் தேங்கியிருக்கும் குப்பைகளால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.



அரசு ஒதுக்கீடு செய்த கூலி 721 ரூபாய் வழங்க கோரி கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக வஉசி மைதானத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.



இந்நிலையில் ஆறாம் நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இதில் பங்கேற்று கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் எங்கே எனவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.



அதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் ஆயுத பூஜை, விஜயதசமி, சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகை தினங்களில் மாநகரில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...