நொய்யல் ஆற்று மேம்பாலத்தின் அணுகுசாலை பணிகள் - கோவையில் போக்குவரத்து மாற்றம்

சிங்காநல்லுார் வெள்ளலுார் ரோடு நொய்யல் ஆற்று மேம்பாலத்தின் அணுகுசாலை பணிகள் நடைபெறுவதால் கோவை மாவட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.


கோவை: மேம்பால பணிகள் நடைபெறுவதால் கோவையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது

சிங்காநல்லுார் வெள்ளலுார் ரோடு நொய்யல் ஆற்று மேம்பாலத்தின் அணுகுசாலை பணிகள் நடக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிங்காநல்லுாரில் இருந்து வெள்ளலுார் செல்லும் பைக் மற்றும் இலகுரக வாகனங்கள், சிங்காநல்லுாரில் இருந்து திருச்சி ரோட்டில், சாந்தி கியர்ஸ் சந்திப்பு, ஒண்டிப்புதுார் சந்திப்பு வழியாக, நெசவாளர் காலனி, பட்டணம், நொய்யல் பாலம், எல் அண்ட் டி பைபாஸ் சென்று, வெள்ளலுார் செல்லலாம்.

ஒண்டிப்புதுார் மேம்பாலம், மிராஜ் தியேட்டர் அருகில் 'யூ' டர்ன் செய்து பாலத்தின் சர்வீஸ் ரோடு, பட்டணம் நொய்யல் பாலத்தின் வழியாக, எல் அண்ட் டி பைபாஸ், பாலக்காடு ரோட்டில் வலப்புறம் திரும்பி வெள்ளலுார் செல்லலாம்.

சாந்தி கியர்ஸ், ஒண்டிப்புதுார் சந்திப்பு, ஒண்டிப்புதுார் மேம்பாலம், காமாட்சிபுரம் சோதனை சாவடி, தனியார் பள்ளி அருகே 'யூ' டர்ன் செய்து கோவை ரோட்டை அடைந்து, எல் அண்ட் டி பைபாஸ், பாலக்காடு ரோடு, கஞ்சிக்கோனாம்பாளையம் வழியாகவும் வெள்ளலுார் செல்லலாம்.

கனரக வாகனங்கள் சிங்காநல்லுாரில் இருந்து திருச்சி ரோடு வழியாக சாந்தி கியர்ஸ், ஒண்டிப்புதுார் சந்திப்பு, ஒண்டிப்புதுார் மேம்பாலம், காமாட்சிபுரம் சோதனை சாவடி, இருகூர் பிரிவு, திருச்சி ரோடு, எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணிபுதுார் ரோட்டிலிருந்து வலப்புறம் திரும்பி சுங்கச்சாவடி வந்து, கஞ்சிக்கோனாம்பாளையம் வழியாக வெள்ளலுார் செல்லலாம்.

வெள்ளலுாரில் இருந்து சிங்காநல்லுார் செல்லும் இலகுரகவாகனங்கள், வெள்ளலுார் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிலிருந்து வலப்புறம் திரும்பி, பட்டணம் ரோடு வழியாக, எல் அண்ட் டி புறவழிச்சாலையை அடைந்து, நெசவாளர் காலனி, நொய்யல் பாலத்தில், இடப்பக்கமாக, ஒண்டிப்புதுார் சந்திப்பு வழியாக செல்லலாம்.

வெள்ளலுாரில் இருந்து சிங்காநல்லுார் செல்லும் கனரக வாகனங்கள், வெள்ளலுார் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிலிருந்து வலப்புறம் திரும்பி, எல்.ஜி., நகர் வழியாக, எல் அண்ட் டி புறச்சாலையை அடைந்து, நெசவாளர் காலனி, நொய்யல் பாலத்தில், இடப்பக்கமாக, ஒண்டிப்புதுார் சந்திப்பு வழியாக செல்லலாம்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...