சந்தேகத்திற்குரிய நபர்களை பார்த்தால் தகவல் கொடுக்கவும் - கோவை மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான விஷயங்களை பார்த்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கும்படி பொதுமக்களிடம் கோவை எஸ்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கொச்சின் குண்டு வெடிப்பு தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.



கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பத்தின் எதிரொலியாக தமிழக - கேரளா எல்லையான கோவையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் மேற்பார்வையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் தமிழக - கேரள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.



குறிப்பாக கோவை மாவட்டம் கேரள எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகளில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் மேற்பார்வையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



அதேபோல் கோவையில் உள்ள முக்கிய தேவலாயங்கள், கோவில்கள், மசூதிகள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100 க்கு மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் தொடர்ச்சியாக தமிழக - கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் மோப்ப நாய் உதவியுடன் வாகன தணிக்கை நடைபெறுவதை எஸ்.பி பத்ரிநாரயணன் நேரில் பார்வையிட்டார்.



பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன தணிக்கை நடைபெறுவதாகவும் ஒவ்வொரு சோதனை சாவடியிலும் உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு local காவலர்கள், நான்கு AR போலீஸ் போடப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். கோவையில் உள்ள சோதனை சாவடியில் வாளையார் சோதனை சாவடி மிகவும் முக்கியமானது என்பதால் இந்த சோதனை சாவடியில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 40 பீட் களுக்கு காவலர்கள் செல்லும் நிலையில் தற்பொழுது 65 பீட் செல்லக் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கூட்டம் அதிகமாக உள்ள முக்கிய வழிபாட்டுத் தளங்களிலும் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு ஏடிஎஸ்பி ஐந்து டிஎஸ்பி 20 காவல் ஆய்வாளர்கள் அனைவரும் மதியத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் தொடர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இது மேலும் தொடரும் எனவும் தெரிவித்தார். மக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்.

காவல்துறை அனைத்தையும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான ஏதேனும் விஷயங்களை பார்த்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கும் படியும் சோதனை சாவடிகளில் காவல்துறையினர் சோதனைக்கு ஒத்துழைப்பு நாளும் மாறும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...