உடுமலை தமிழக கேரளா எல்லையில் திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வாகன சோதனை

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிறிஸ்துவ கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததையடுத்து, உடுமலை தமிழக-கேரளா எல்லையில் திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.


திருப்பூர்: அமராவதி அருகே உள்ள ஒன்பதாறு சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்து பலர் காயம் அடைந்தும் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் எதிரொலியாக கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



அதன் ஒரு பகுதியாக தமிழக-கேரளா எல்லையான உடுமலை அடுத்த அமராவதி அருகே உள்ள ஒன்பதாறு சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.



இந்த சூழலில் நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களில் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்படும் சோதனையை பார்வையிட்டார்.



மேலும் உடுமலை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்வின் போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...