டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஓன்றியம் வாகத் தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட வி. வேலூர் பகுதியில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது.



அந்த கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூங்கில் தொழவு, வி.வேலூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை நெகமம் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கடையை சுற்றிலும் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதால் வன்கொடுமைகள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கடை அமைவதால் பெண்கள், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடுமலை டி எஸ் பி சுகுமாரன் மற்றும் வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கடை இடமாற்றம் செய்யபடும் என உறுதி அளிக்கபட்டதால் தற்காலிமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் அரசு மதுபான கடை திறந்தால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் மீண்டும் நடத்தப்படும் என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை நெகமம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கபட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...