குருடம்பாளையம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை - எம்.எல்.ஏ அருண்குமார் தொடங்கிவைப்பு

கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவி நகர் பகுதியில் ரூபாய் 2 கோடியே 87 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.


கோவை: குருடம்பாளையம் ஊராட்சியில் ரூபாய் 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி, சாலை பணிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட குருடம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சத்து 47 ஆயிரம், LPA நிதியில் ரூபாய் ஒரு கோடியே 47 லட்சத்து 98 ஆயிரம், 15வது நிதிக்குழு மானியம் ஊராட்சி சார்பில் ரூபாய் 40 லட்சத்து 66 ஆயிரம் மற்றும் ஊராட்சி பொது நிதியில் இருந்து 78 லட்சத்து 8 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 87 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி, சாலை பணிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு குருடம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் டி.ரவி தலைமை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய சேர்மன் நர்மதா துரைசாமி முன்னிலை வகித்தார்.



கதிர்நாயக்கன்பாளையம் ஶ்ரீதேவி நகரில் நடைபெற்ற பூமி பூஜைக்கு சிறப்பு விருந்தினராக அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டரிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த விழாவில் அதிமுக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், திமுக வார்டு உறுப்பினர்கள் வளர்மதி, ராஜாமணி, ஒப்பந்ததாரர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...