பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 2222 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு 07.01.2024 அன்று நடைபெறவுள்ளது எனவும் இத்தேர்வுக்கு இணையதள (http//www.trbtn.gov.in) முகவரி வாயிலாக 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல் வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்று BED யில் 50% மேல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி மற்றும் TNTET PAPER II (Teacher Eligihility Test Certificate) பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு 53 (பொதுப் பிரிவினர்) 58(இட ஒதுக்கீட்டில் அடங்கும் ஆதரவற்ற விதவை உட்பட அனைத்து பிரிவினருக்கும்). இதர தகுதிகளின் விவரங்களை (http//www.trb.tn.gov.in என்ற இணையதன் முகவரியில் பார்த்து விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு உதவும் வகையில் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test); வாரத்தேர்வுகள் முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளதால் 10.11.2023 தேதிக்குள் நேரிலோ அல்லது Google Link https//formsgle:FNHXWyiuCraG1AoL8 வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...