இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வருமாறு அந்நாட்டு ஆளுநர் அழைப்பு

பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு மட்டுமே கல்வி மற்றும் மருத்துவமனைகளை நடத்தி வருவதால் இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அந்நாட்டிற்கு வந்தால் இங்கு உள்ளவர்களுக்கு தொழில் தொடங்க ஒரு வாய்ப்பாக அமையும் என அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் மேற்படிப்புக்கு செல்ல முடியவில்லை, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வர வேண்டும் என்று அந்நாட்டின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.



கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கே.எஸ்.ஜி கல்லூரியில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டனின் ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல், மற்றும் அந்நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஸ்ரீ சசீந்திரன் முத்துவேல்,



பப்புவா நியூ கினியா நாட்டில் பல கல்லூரிகள் உள்ளன. ஆனால் அங்கு அரசாங்கத்தால் மட்டுமே நடத்தப்படும் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் போல் அங்கு இல்லை. இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை அங்கு அழைத்து கொண்டிருக்கிறோம். அந்த நாட்டில் தொடங்க நிறைய வாய்ப்பு உள்ளது. இங்கு உள்ளவர்களுக்கு வியாபாரமாகவும் இருக்கும். எங்கள் நாடு ஆஸ்திரியாவில் இருந்து விடுதலை பெற்ற நாடு.

இந்தியாவுக்கும் பப்புவா நாட்டிற்கும் 80லிருந்தே உறவுகள் உள்ளது. அங்கு கனிம வளம், விவசாயம் சம்மந்தபட்டதும் அதிகம் உள்ளது. சாட்டிலைட் தொடர்பாக இந்தியாவிலிருந்து பப்புவா நாட்டிற்கு வரும் 25 ஆம் தேதி இஸ்ரோ குழுவினர்கள் வருகிறார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து ஒரு வருடத்திற்கு 80ஆயிரம் மாணவர்கள் வெளியில் வருகிறார்கள்.10 ஆயிரம் பேர் தொழில் படிப்பு, பத்தாயிரம் பேர் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். 10 ஆயிரம் பேருக்கு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கிறது. இதனால் 50 ஆயிரம் மாணவர்கள் மேல் துறைக்கு போக முடியாமல் உள்ளனர்.

அங்கு தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தால் அவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கொடுக்கலாம். அங்குள்ள இந்தியர்கள், நவராத்திரி கொண்டாடினர். இந்தியர்கள் வெளி நாட்டில் ஒற்றுமையாக உள்ளனர். வெளிநாடு தமிழர்கள் தங்களது கலாச்சாரத்தை மறக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...