பாரா விளையாட்டு போட்டியில் பதக்கம் - கோவை ஆட்சியரிடம் முத்துராஜ் வாழ்த்து

கோவையை சேர்ந்த வீல் சேர் பாரா தடகள வீரர் முத்துராஜ் குண்டு எறிதல், வட்டு எறிதல் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கம் பெற்று முதல் முறையாக சாதனையை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


கோவை: சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாற்றுத்திறனாளிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீனாவில் ஆசிய அளவிலான பாரா விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா தடகள போட்டியில் 8 வீரர் வீராங்கனைகளும், பாரா இறகு பந்து போட்டியில் 6 வீரர் வீராங்கனைகளும், பாரா வால் வீச்சு போட்டியில் ஒரு வீராங்கனைகளும் பங்கேற்று உள்ளனர்.

அதில் கோவையை சேர்ந்த வீல் சேர் பாரா தடகள வீரர் முத்துராஜ் குண்டு எறிதல், வட்டு எறிதல் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கம் பெற்று முதல் முறையாக சாதனையை படைத்துள்ளார்.



பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இவருக்கு பிரதமர், தமிழக முதலமைச்சர் அமைச்சர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே,கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முத்துராஜ் வாழ்த்து பெற்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...