நெருங்கும் தீபாவளி பண்டிகை - திருப்பூரில் காவல்துறை தீவிர கண்காணிப்பு

திருப்பூரில் தீபாவளியையொட்டி கடை தெருக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டை தடுக்கும் வகையில் உயர்கோபுரம் அமைத்து கண்காணிக்க காவல்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், திருப்பூரில் முக்கியமான கடை வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புகள், பட்டாசுகள், ஆடைகள் தான் இவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் கடை வீதிகளுக்கு செல்வது வழக்கம்.



இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் அதிகமான பொதுமக்கள் கடை வீதிகளுக்கு குவிவார்கள் என்பதால், மாநகர போலீசார் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.



அதன்படி முக்கிய சாலையான குமரன் சாலையில் சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்ல தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கவும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.



இதுபோல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி அருகே போன்ற பகுதிகளில் அதிகமான பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.



இதுபோல் உயர்கோபுரம் அமைத்தும் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...