ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயிற்சி -கோவை வேளாண் பல்கலை அறிவிப்பு

ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றிய பயிற்சிக்கு கலந்து கொள்ள ரூ.900/- நேரிடையாக பயிற்சி நாள் அன்று செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.


கோவை: கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல் மற்றும் பொறிவண்டு வளர்ப்பு குறித்த பயிற்சியில் பங்கேற்கலாம் என கோவை வேளாண் பல்கலை அறிவித்துள்ளது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை மூலமாக “ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்" பற்றிய ஒரு நாள் பயிற்சி 08.11.2023 (புதன்கிழமை) அன்று அளிக்கப்படும். பயிற்சியின் முக்கிய அம்சங்களாவன,

*ஒட்டுண்ணி வகைகள்

*ஊண் விழுங்கிகள், இரை விழுங்கிகள்

*நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை

* டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு புழு ஒட்டுண்ணி வளர்ப்பு

* கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல்

* பொறிவண்டு வளர்ப்பு

* பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி அசரோபகஸ் வளர்ப்பு

* பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 08.11.2023 (புதன்கிழமை) அன்று காலை 9.00 மணிக்குள்ளாக பூச்சியியல் துறைக்கு தங்கள் செலவில் வந்து சேர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ரூ.900/- (ரூபாய் தொள்ளாயிரம் மட்டும்) நேரிடையாக பயிற்சி நாள் அன்று செலுத்த வேண்டும். பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003. தொலைபேசி எண் - 0422 - 6611214

மின்னஞ்சல்:[email protected]

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...