உடுமலையில் வாக்காளர் சிறப்பு முகாம் - வட்டாச்சியர் நேரில் ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை வட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு வழக்கமான திருத்தப் பணிகள் தொடங்கியது. அன்றைய தினம் முதல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும் நேரில் படிவங்கள் அளித்தும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் 2024 ஜன.1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் வாக்காளர்கள் பெயர் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் மற்றும் நேரிலும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் 2 நாட்கள் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.



அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அத்துடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்காமல் இருந்தால் அதிகாரிகள் இனைத்துக் கொடுத்தனர்.



உடுமலை தாலுக்கா பகுதியில் நடைபெற்ற இந்த பணியை உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...