கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழை - கணுவாய் பன்னிமடை சாலையில் உள்ள தரைப்பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் மழை நீர்

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக கணுவாய்-பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக கணுவாய்- பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் ஓடுகிறது.



வழக்கத்தை விட நேற்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் இந்த தரைப்பாலத்தில் அதிகளவு மழை நீர் ஓடுகிறது. இதனால் இவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழியாக பொது பேருந்து போக்குவரத்து இல்லை என்றாலும் தனிநபர் வாகனங்களில் கணுவாயில் இருந்து பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மழைநீர், வெள்ளம் போல் செல்வதால் பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாமல் வேறு பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...