குழந்தைகளையும் விட்டுவைக்காத நீரிழிவு சக்கரை நோய் - கோவையில் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

குழந்தைகளில் 10 சதவீதம் பேர் டைப் 2 நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக விழிப்புணர்வில் தெரிவிக்கப்பட்டது.


கோவை: நீரழிவு நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கோவையில் நடைபெற்றது.

உலக சுகாதார நிறுவனத்தால் நவம்பர் 14ல் "வேர்ல்ட் டயாபடீஸ் டே" நாளாக அறிவிக்கப்பட்டு, இந்த நாளில் நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் எஸ்.பி டயபட்டிக் ஃபவுண்டேசன் சார்பாக, நீரிழிவு சக்கரை நோய் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடைபெற்றது.



நீரிழிவு சக்கரை நோய் தீர்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்ற அடிப்படையில் இந்த சைக்கிள் பயணம் நடைபெற்றது.

இதுகுறித்து பேசிய நீரிழிவு சர்க்கரை நோயை சிகிச்சை நிபுணர் சுகுணா, உலக அளவில் நீரிழிவு சக்கரை நோய் பாதிப்பு அதிகரித்திருக்கின்றன. வயதானவர்களை பாதித்த இந்த நீரிழிவு நடுத்தர வயதுடையோர், இளைஞர் படாளத்தை கணிசமாக பாதித்தது. இந்த நிலையில் குழந்தைகளும் இந்த நோய்க்கு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். உலக அளவில் இது காமன் டிசீஸ் என்று சொல்லும் அளவுக்கு நீரிழிவு நோய் சமுதாயத்துக்கு மாறி இருக்கின்றன.

இந்திய அளவில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றன. 50 சதவீதம் பேர் முறையான சிகிச்சை எடுக்க ஆரம்பிக்கின்றனர். சிகிச்சை எடுப்பவர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உரிய மருந்துகளை உட்கொண்டும் மருத்துவர்கள் அறிவுரைகளையும் பின்பற்றுகின்றனர்.

வயதானவர்கள் வாலிபர்கள் மட்டுமின்றி தற்போது, 7 முதல் 10 வயது குழந்தைகளுக்கும் நீரிழிவு சர்க்கரை அதிகரித்திருக்கின்றன. டைப் 1 டயாபடீஸ் 10ல் 1 குழந்தைக்கு இருந்த நிலையில், தற்போது குழந்தைகளின் 10 சதவீதம் பேருக்கு டைப் 2 டயாபடீஸ் இருப்பதாக இன்டர்நேஷனல் டயாபடீஸ் ஃபெடரேஷன் அமைப்பின் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

மனிதர்களுக்கு பொதுவாக நீரிழிவு நோயின் தாக்கம் ஆரம்பத்தில் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அதன் வீரியம் அதிகமாகும் பொழுது, கண் குறைபாடு, கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகளில் ஆரம்பித்து சிறுநீரகமனித உடலுக்கு பிரச்சனை ஏற்படும் அளவுக்கு இதன் தாக்கம் இருக்கும். சமுதாயத்தில் மாறிவரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை நீரிழிவுக்கு அடிப்படை என்பதனால், துரித உணவை தவிர்த்து சரி விகித நிலையில் சத்தான உணவை உட்கொள்ளுதல், நல்ல உறக்கம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...