கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு

திருச்செந்தூர் ரெயிலில் செல்ல வசதியாக கோவையில் இருந்து மீண்டும் பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: திருச்செந்தூர் ரெயிலில் செல்ல வசதியாக கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படுமா என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இணைப்பு ரெயில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, மதுரை, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 7.10 மணிக்கு வந்து, பின்னர் திருச்செந்தூருக்கு மாலை 3.15 மணிக்கு சென்று அடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து பகல் 12.20 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கு வந்து சேருகிறது.

கொரோனாவிற்கு முன் இந்த ரெயிலில் செல்ல கோவையில் இருந்து இணைப்பு ரெயில் இயக்கப்பட்டது. தற்போது அந்த ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவை, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ் ஏறி கோவை, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ் ஏறி பொள்ளாச்சிக்கு வந்து திருச்செந்தூர்ரெயிலில் செல்கின்றனர். இதனால் திருச்செந்தூர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு மீண்டும் இணைப்பு ரெயில்இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது, மீண்டும் இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்.

கொரோனாவிற்கு முன் கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு 6.45 மணிக்கு வரும் வகையில் இணைப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதேபோன்று அந்தரெயில் பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு கோவையை சென்று அடைந்தது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

மேலும் கிணத்துக்கடவு, போத்தனூர் ரெயில் நிலையங்களில் நின்று சென்ற தால் தென்மாவட்ட மக்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி கொண்டனர். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட ரெயிலை மீண்டும் இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் திருச்செந்தூர் ரெயிலில் செல்ல கோவை, கிணத்துக்கடவு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ் பிடித்து பொள்ளாச்சிக்கு வர வேண்டியது உள்ளது. மேலும் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் ஒரு பஸ் பிடித்து ரெயில் நிலையம் செல்ல வேண்டியநிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே திருச்செந்தூர் ரெயிலில் செல்ல வசதியாக கோவையில் இருந்து மீண்டும் பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி இணைப்பு ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...