குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மருத்துவ முகாமில் பசு, எருமை, மாடு, ஆடு, கோழி மற்றும் நாய்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி என 1124 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கர்த்தர் தேவை ஊராட்சிக்குட்பட்டடிரைவில் நடைபெற்றது.

முகாமிற்கு குண்டடம் வட்டாரம் காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சேகர், துணைத்தலைவர் சின்ன காளிமுத்து ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முகாமில் சின்ன மோளரப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் பிரகாசம் தலைமையில் மருத்துவர்கள் கொண்ட குழு பசு, எருமை, மாடு, ஆடு, கோழி மற்றும் நாய்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி என 1124 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் மழை மற்றும் பனி காலங்களில் கால்நடைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...