கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர்

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமியின் பக்தர்கள் நாடு முழுவதும் இன்று மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர்.


கோவை: கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.



கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமியின் பக்தர்கள் நாடு முழுவதும் இன்று மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர்.



குறிப்பாக முதல் முறையாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் அன்று அதிகாலை எழுந்து குளித்து ஆலயத்தில் குரு மார்கள் மூலமாக துளசிமணி மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை துவக்குகின்றனர்.



அவ்வாறு முதல் முறையாக மாலை அணிபவர்களை கண்ணி சாமி என்று அழைப்பது வழக்கம். மேலும் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் பலமுறை சபரிமலை சென்று திரும்பி இருந்தாலும் கார்த்திகை முதல் நாளன்று மாலை அணிந்து மண்டல பூஜைகளின் கடைசி பூஜையான படி பூஜை நடைபெற உள்ள கால இடைவெளியான இரண்டு மண்டலங்கள் நோன்பிருந்து சபரிமலை செல்வது வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.



அவர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு மாலை அணிந்து தங்களுடைய நோன்பை துவக்கினார்கள். இதற்காக கோவை சித்தாபுதூர் ஐயப்பன் ஆலயத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...