திருமணம் செய்ய தடை விதித்த அண்ணனை கொன்ற தங்கை கைது

கோவை செல்வபுரத்தை அடுத்த கல்லாமேடு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கு செல்வராஜ் (32) என்ற மகனும், நாகலட்சுமி (23) என்ற மகளும் உள்ளனர். செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ரேணுகா வேலைக்கு சென்று வந்தார்.

நாகலட்சுமி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இந்த நிலையில், நாகலட்சுமி மீண்டும் திருமணம் செய்ய போவதாக செல்வராஜிடம் கூறியதாக தெரிகிறது. இதை செல்வராஜ் எதிர்த்துள்ளார். இதனால் அண்ணன் தங்கை இடையே கடந்த சில தினங்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இன்று காலை வழக்கம் போல ரேணுகா வேலைக்கு சென்றுவிட அண்ணன்- தங்கைக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகலட்சுமி, அவரது அண்ணன் செல்வராஜின் மார்பில் மிதித்துள்ளார். வலியால் துடித்த செல்வராஜின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இந்நிலையில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுதொடர்பாக, செல்வபுரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிச்தனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நாகலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...