கோவையில் நடைபெற்றுவரும் 31வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி.

கோவையில் நடைபெற்றுவரும் 31வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கும் தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது மூன்றாம் நாள்  போட்டியில் ஆண்கள் முதல் போட்டியில் கொச்சி, சுங்கம் மற்றும் மத்திய கலால் அணியை எதிர்த்து பெங்களூரு, ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி விளையாடியது. 

இதில் ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய சுங்கம் மற்றும் மத்திய கலால் அணி 46 புள்ளிகள் பெற்றது. இதில் ஆர்மி சர்வீசஸ் கார்ப் அண்டு சென்டர் அணியின் வீரர்கள் இசாக் டி. தாமஸ் 18 புள்ளிகளும், ஜிதாந்தர் சிங் 8 புள்ளிகளும் பெற்றனர். சுங்கம் மற்றும் மத்திய கலால் அணியின் வீரர்கள் எட்ரிக் 9 புள்ளிகளும், போனி 9 புள்ளிகளும் பெற்றனர். 


இரண்டாவது போட்டியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து லூதியான கூடைப்பந்து அகாடமி அணி விளையாடியது. இதில் இந்தியன் ஏர்போர்ஸ் அணி 95 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது, இதன் வீரர்கள் ஜி.நரேந்தர் 26 புள்ளிகள், ஹேமந்த் செரோன் 23 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய லூதியான கூடைப்பந்து அகாடமி அணி 80 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் அர்ஷ்பிரீத் சிங் 24 புள்ளிகள், ஜெய்பால் சிங் 22 புள்ளிகள் பெற்றனர்.


மூன்றாவது போட்டியில் மத்திய இரயில்வே அணியை எதிர்த்து குஜராத், வருமான வரி அணி விளையாடியது. இதில் மத்திய இரயில்வே அணி 68 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் ராகேஷ் 16 புள்ளிகளும், அமித் 15 புள்ளிகளும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய வருமான வரி அணி 63 புள்ளிகள் பெற்றது. இதன் வீரர்கள் டிஷாந்த் 23 புள்ளிகளும், காசி 21 புள்ளிகளும் எடுத்தனர். 


நான்காவது போட்டியில் டெக்ராடூன், ஓஎன்ஜிசி அணியை எதிர்த்து சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடியது. இதில் ஓஎன்ஜிசி அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 56 புள்ளிகள் பெற்றது. 




பெண்கள் முதல் போட்டியில் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் தென்னக இரயில்வே அணி 65 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய பஞ்சாப் அணி 52 புள்ளிகள் பெற்றது. இதில் தென்னக இரயில்வே அணியின் ராஜா பிரியா 15 புள்ளிகளும், அமிதா மின்ஜ் 14 புள்ளிகளும் எடுத்தனர். பஞ்சப் அணியின் ககன்தீப் கவுர் 16 புள்ளிகளும், அமன்பிரீத் கவுர் 14 புள்ளிகளும் பெற்றனர்.


இரண்டாவது போட்டியில் மேற்கு வங்க அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இதில் மேற்கு வங்கம் அணி 79 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் சீதாமணிடுடு 19 புள்ளிகளும், அன்ஜனா 15 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய டெல்லி அணி 50 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்களைகள் ஷாகிபா மற்றும் பிரின்சி ஆகியோர் 11 புள்ளிகள் பெற்றனர்.


மூன்றாவது போட்டியில் கேரளா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் கேரளா அணி 73 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்கனைகள் பி. ஆஞ்சனா 26 புள்ளிகளும், பி.சூர்யா 12 புள்ளிகளும் எடுத்தனர்.  எதிர்த்து விளையாடிய தமிழக அணி 61 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் ஆர்.வர்சனா 21 புள்ளிகளும், எஸ்.ஸ்ரீவித்யா 13 புள்ளிகளும் பெற்றனர்.


நான்காவது போட்டியில் தெலுங்கான அணியை எதிர்த்து சத்தீஸ்கர் அணி விளையாடியது. இதில் சத்தீஸ்கர் அணி 86 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய தெலுங்கான அணி 79 புள்ளிகள் பெற்றது.


நாளை நடைபெறும்  அரையிறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடுகிறது.மற்றொரு போட்டியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து ஓஎன்ஜிசி அணி விளையாடுகிறது
பெண்கள் பிரிவில் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து தமிழ்நாடு அணியும் மேற்கு வங்க அணியை எதிர்த்து சத்தீஸ்கர் அணியும் விளையாடுகின்றன.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...