போதிய மழையின்றி வறட்சியின் பிடியில் சிக்கிய வால்பாறை அணைகள்

வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்ததால் வால்பாறையில் அமைந்துள்ள சோலையார் அணை, நீரார்அணை, சின்னக்கல்லார் அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அணைகள் வறண்ட மண்மேடுகளாக காட்சியளிக்கின்றது.

 

வால்பாறையில் ஆண்டுதோறும்  ஜுன் மாதம் மழை தொடங்கி 6 மாதங்களுக்கு விட்டுவிட்டு பெய்துவரும். இந்த ஆண்டு சோலையார் அணை முழு கொள்ளளவான 160 அடியில் 131 அடியைமட்டுமே எட்டியுள்ளது. இதனால் மாணாம்பள்ளி, சோலையார் அணையில் உள்ள 2 நீர் மின்நிலையங்களும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 



கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் கடைசியிலேயே சோலையார் ஆணை முழுகொள்ளளவை எட்டி 123 நாட்கள் முழுகொள்ளளவிலேயே இருந்த நிலையில் அணை மூன்று முறை திரந்து விடப்பட்டது.



2015-ம் ஆண்டும் அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியதால் ஒரு முறை திறந்து  விடப்பட்ட நிலையில் மழை குறைவால் நீர்வரத்து குறையத் தொடங்கியது.



ஆனால் இந்த ஆண்டு ஜுன் முதல் ஆண்டு இறுதி வரையிலும் அதிகமழை பெய்யாதிருப்பதால் வால்பாறை சோலையார் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையின் நீர்மட்டம் 3.34 அடியில் உள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...