நடிகை திரிஷாவை தவறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கோவையில் அண்ணாமலை பேட்டி

கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நடிகை திரிஷாவை ஆறுமாதமாக சிலர் தவறாக பேசி வருகின்றனர். இது கண்டிக்கதக்கது எனவும், திரிஷாவை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.


கோவை: மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த எல்.முருகனுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அண்ணாமலை, எல்.முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களை உறுப்பினராகியுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா பரிந்துரையின் பேரில் அவர் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளார். இவருக்கு வழங்கிய பதவியால் தமிழகத்தில் மேலும் பாஜகவை பலப்படுத்தும். மேலும்

தொடர்ந்து எல்.முருகன் நீலகிரியில் கட்சியின் கட்டளைக்கு ஏற்றவாறு கட்சி பணியாற்றுவார். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். கட்சி என்ன கட்டளையிட்டாளும் முருகன் பணியாற்றுவார்.

தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நடிகை திரிஷாவை ஒரு ஆறுமாதமாக சிலர் தவறாக பேசி வருகின்றனர்.இது கண்டிக்கதக்கது எனவும் திரிஷாவை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன்,

எனக்கு பதவி வழங்கிய பிரதமர் மோடி மற்றும் மத்தியபிரதேச நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்ட அவர், தமிழகத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி மாநிலங்களைவைக்கு வேண்டும், தமிழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மோடி இந்த பதவி வழங்கியிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்க்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர், மத்திய அரசு தமிழகத்திற்க்கு கொடுத்த நிதியால் இன்று தமிழகம் உள்கட்டமைப்பால் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...