தமிழ்நாடு வேளாண்‌மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆற்றல்‌ பயிர்களை இலக்காக்குதல்‌ - உணவு ஆற்றல்‌ இணைப்பு பயிலரங்கம்‌

புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ துறையின்‌ சிறப்பம்சங்கள்‌, செயல்பாடுகள்‌ மற்றும்‌ உயிரி ஆற்றல்‌ குறித்த ஆராய்ச்சிகள்‌ பற்றி வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதல்வர்‌ முனைவர்‌ அ.ரவிராஜ்‌ எடுத்துரைத்தார்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ ஆக்சியோம்‌ (AXIOM) குழுமம்‌, இணைந்து "ஆற்றல்‌ பயிர்களை இலக்காக்குதல்‌-உணவு ஆற்றல்‌ இணைப்பு" பயிலரங்கத்தினை 22.02.2024 அன்று இராசி விதை அரங்கத்தில்‌ சிறப்பாக நடத்தியது.

இந்நிகழ்ச்சியில்‌, இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்‌ குழுமத்தின்‌ விஞ்ஞானிகள்‌, கேரள அரசின்‌ சுற்றுச்சூழல்‌ அமைச்சகத்தின்‌ உயரதிகாரிகள்‌_ஆக்சியோம்‌ உறுப்பினர்கள்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌.

இந்நிகழ்ச்சியின்‌ போது, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதல்வர்‌ முனைவர்‌ அ.ரவிராஜ்‌ வரவேற்புரை வழங்கினார்‌. அவர்‌ புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ துறையின்‌ சிறப்பம்சங்கள்‌, செயல்பாடுகள்‌ மற்றும்‌ உயிரி ஆற்றல்‌ குறித்த ஆராய்ச்சிகள்‌ பற்றி கூறினார்‌. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ , முனைவர்‌ வெ .கீதாலட்சுமி பயிலரங்கத்தைத்‌ துவக்கி வைத்து பயிலரங்கத்தின்‌ கருப்பொருளான உணவு உற்பத்தி மற்றும்‌ ஆற்றல்‌ அமைப்புகளுக்கு இடையேயான தொடர்புகளை எடுத்துரைத்தார்‌.

மேலும், அவர்‌ இந்திய ஆற்றல்‌ நிலையிலும்‌ சுற்றுச்சூழல்‌ மாசுபாட்டைக்‌ குறைப்பதிலும்‌ உயிரி எரிபொருள்‌ மற்றும்‌ ஆற்றல்‌ பயிர்களின்‌ (சோளம்‌, கரும்பு, கம்பு நேப்பியர்‌, பனை மற்றும்‌ பிற விவசாயக்கழிவுகள்‌) பங்கு குறித்து விவரித்தார்‌. திரு. G.V. சங்கர்‌, இயக்குநர்‌, ஆக்சியோம்‌ இந்தியா பிரைவேட்‌ லிமிடெட்‌ , உயிரி எரிபொருள்‌, ஹைட்ரஜன்‌, எரிபொருள்‌ மின்கலம்‌ மற்றும்‌ நீர்‌ மேலாண்மை ஆகிய களங்களில்‌ தன்‌ பங்கு பற்றி விளக்கினார்‌. K.R.ஜோதிலால்‌, கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ , (MoE,GoK), நரேந்திரநாத்‌, தலைமை நிர்வாக அதிகாரி, (ANERT, Gok), முனைவர்‌ ரவிகேசவன்‌, தாவர இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மரபியல்‌ மையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, முனைவர் ரபி, முதன்மை விஞ்ஞானி, இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்‌ குழுமம்‌, முனைவர்‌ நவ்தீப்‌ டூர்‌ , தலைமை இயக்க அதிகாரி, ஆக்சியோம்‌, முனைவர்‌ ஹேமபிரபா, இயக்குநர்‌ (கரும்பு ஆராய்ச்சி நிலையம்‌), முனைவர்‌ டவங்கடேஷ்‌ மேடா, சஸ்காட்சுவான்‌ (Saskatchewan) பல்கலைக்கழகம்‌, கனடா, முனைவர்‌ பட்டேல்‌, முன்னாள்‌ இயக்குநர்‌ IARI ஆகியோர்‌ இப்பயிலரங்கத்தின்‌ சிறப்புரையாளர்களாக பங்கேற்றனர்‌.

அவர்கள்‌ அனைவரும்‌ உயிர்‌ ஆற்றல்‌, ஆற்றல்‌ பயிர்களின்‌ மரபியல்‌ அம்சங்கள்‌ மற்றும்‌ அதன்‌ ஆராய்ச்சிகளை விரிவாக எடுத்துரைத்தனர்‌. பயிர்‌ விளைச்சலை மேம்படுத்துதல்‌ அறுவடைக்கு முந்தைய மற்றும்‌ பிந்தைய மேலாண்மை, மண்‌ ஆரோக்கியம்‌ மற்றும்‌ அதன்‌ நிலத்தன்மை ஆகியவற்றினை மேற்கோள்காட்டி பயிலரங்கத்தினை சிறப்பித்தனர்‌. சுதர்சன்‌ கூரியவன்ஷி ஆக்சியோம்‌, அவர்களின்‌ நன்றியுரையுடன்‌ பயிலரங்கம்‌ இனிதாக நிறைவு பெற்றது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...