கோவை காரமடை அருகே பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை கோரிய பெண்

கோவை காரமடை அருகே, தங்கள் வீட்டில் இருந்து பொருட்களை திருடி மிரட்டல் விடுத்ததாக பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை கோரும் பெண் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளார். நிலம் சம்பந்தமான சர்ச்சை முறைகேடாக முன்னெடுப்புக்கும் திருட்டு மற்றும் மிரட்டலுக்கும் வழிவகுத்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் காரமடை கெம்மாரம்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி கௌரி, பாஜக பிரமுகரின் கணவர் மகேந்திரகுமார் தங்கள் வீட்டில் இருந்த பொருட்களை திருடி, மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரகுமார், என்பவருக்கு சொந்தமான 6.48 ஏக்கர் நிலத்தை வாங்க கிரைய ஒப்பந்தம் பத்திரம் போட்டதாகவும், இதற்கான பணத்தில் பெரும்பாலும் பங்கு கொடுக்கப்பட்டு, அந்த நிலத்தில் தாங்கள் வீடு கட்டி அங்கு தனது உறவினர்கள் இருந்து வரும் நிலையில், நிலத்தை மகேந்திரகுமார் தங்களுக்கு கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் என்பது குறித்து பல முறை கேட்டும் எந்த பதிலும் அளிக்காமல் மிரட்டுவதாக கூறுகிறார் கௌரி. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சில பொருட்கள் மட்டும் திரும்ப பெற்றுள்ளார் என்பதாகவும், மகேந்திரகுமாரின் மனைவி பிரீத்தி பாஜக நிறுவாகி என்பவதால் அதனை வைத்து தங்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். நிலம் தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அத்துமீறி வீட்டில் உள்ள பொருட்களை திருடுவது மற்றும் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்பி போன்ற இரும்பு ஆயுதங்களோடு உலா வருவதாகவும், தங்களது பூட்டிய வீட்டை திறந்து மது குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே வீசிச் சென்றுள்ளதோடு அடிக்கடி அப்பகுதி சுற்றிவருவதாக தெரிவித்தார். எனவே மகேந்திரகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...