கோவையில் உள்ள கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்துச் சென்ற காவல்துறையினர்

கோவில் நிர்வாகிகள் கடைவீதி காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா கோனியம்மனுக்கு சீர் வரிசைகளை எடுத்துச் சென்றார்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை காண்பதற்கு வருவர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் அன்னதானம், நீர்மோர், குளிர்பானங்கள் ஆகியவற்றையும் வழங்குவர்.

தேர்நிலைத் திடல் பகுதியில் துவங்கும் இந்த தேரோட்டம் ஒப்பணக்காரர் வீதி வழியாக பிரகாசம் வந்தடைந்து மீண்டும் தேர் நிலை சென்றடையும். இந்நிலையில் வருடம் தோறும் கடைவீதி காவல் நிலையத்தில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்படும்.



அதன்படி இந்த வருடமும் கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா கோனியம்மனுக்கு சீர் வரிசைகளை எடுத்துச் சென்றார்.



முன்னதாக கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடைவீதி காவல்துறையினர் பழங்கள், புடவைகள், பூமாலைகள் அடங்கிய சீர்வரிசைகளை எடுத்துச் சென்றனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...