தொண்டாமுத்தூர் பெருமாள்கோவில்பதியில் தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்

நேற்று இரவு (மார்ச்.1) சுமார் 15க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து, வாழை மற்றும் தென்னை மரங்களை முழுமையாக சேதப்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.


கோவை: கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பெருமாள்கோவில்பதி பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாயம் தோட்டம் உள்ளது.



இங்கு வாழை, தென்னை உட்பட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றார்.

நேற்று இரவு (மார்ச்.1) சுமார் 15க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் இவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.



அப்போது, அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை முழுமையாக சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டங்கள் 3லட்சம் மதிப்பிலான பயிர்களை முழுமையாக சேதப்படுத்திவிட்டு சென்று விட்டதாக வேதனை தெரிவித்தனர்.

விவசாய நிலத்திற்குள் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் வனத்தையொட்டி இருக்கக்கூடிய விவசாய தோட்டத்திற்கு சோலார் மின் வேலி வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு மின் வேலி அமைக்கப்பட்டால் யானைகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றலாம் என தெரிவித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...