கோவை மாநகராட்சி வ.உ.சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய குழியில் சிக்கிய வாகனங்கள்

வ.உ.சி பகுதியில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று சிக்கியது. பின் தொடர்ந்து வந்த தனியார் பள்ளி வாகனமும் குழியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் பணிகள் நிறைவடைந்து இருந்தாலும் குழிகள் சரிவர மூடப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மார்ச்.6) காலை கோவை மாநகராட்சி வஉசி பகுதியில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று சிக்கியது.



அதேசமயம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்த தனியார் பள்ளி வாகனமும் குழியில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டிராக்டர் உதவியுடன் குழியில் சிக்கிய குப்பை சேகரிக்கும் வாகனம் வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பள்ளி வாகனமும் சாமர்த்தியமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளும் போது தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...