பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றம்

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் அப்பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தினையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று (12.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.



அதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.89க்குட்பட்ட பி.என்.டி.காலனி சமீம் கார்டன் மற்றும் ஜூடிசில் காலனி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ..20.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தினை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.



தொடர்ந்து, வார்டு எண்.89க்குட்பட்ட கோவைப்புதூர் ஹவுசிங்யூனிட் சாலையிலிருந்து சுண்டக்காமுத்தூர் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச்சாலை அமைப்பது குறித்தும் மற்றும் வார்டு எண்.100க்குட்பட்ட பொள்ளாச்சி சாலை முதல் செட்டிபாளையம் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச் சாலை அமைப்பது குறித்தும் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து,தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்குட்பட்ட நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.149.00 இலட்சம் மதிப்பீட்டில் சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் எஸ்.எஸ்.கார்டன் முதல் செந்தமிழ் நகர் வரை பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் எஸ்.எஸ்.கார்டன் வரை தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் பாலமுருகன் கோவில் சந்திப்பு முதல் மஞ்சிப்பள்ளம் வரை மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் துவக்கி வைத்தார்கள்.



இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பாபு, செந்தில்குமார், முருகேசன், மாநகரப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, சக்திவேல், நாசர், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...