கோவையில் அறிவிக்கப்பட்ட 4 தொழிற்பேட்டைகளையும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் - வானதி சீனிவாசன் MLA கோரிக்கை

கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளிலும் துணை மின் நிலையம் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக முடித்து அதிகமானோர் தொழில் தொடங்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மாநில சீனிவாசன் இன்று (மார்ச்.14) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரமான கோவை தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மாவட்டம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் பெரும் பங்களித்து வருகிறது.

துணை மின் நிலையங்கள், சாலைகள் போன்ற பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளும் இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று தொழில்முனைவோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் நான்கு தொழிற்பேட்டைகளிலும் தொழில் தொடங்க அதிகமானோர் முன்வரவில்லை. 'கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் (கொடிசியா) இரண்டு தொழிற் பூங்காக்கள், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் (கோசிமா தொழிற்பேட்டை ஆகியவற்றில் மூன்று மாதங்களில் பொதுவான உள் கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்படும் என்று, கோவை மாவட்ட தொழில் மையம் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வாரப்பட்டியில் அறிவிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்காவிலும் பணிகள் தாமதமாகி வருகின்றன. இங்கு தொழில் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்தவர்களுக்கும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளிலும் துணை மின் நிலையம் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக முடித்து அதிகமானோர் தொழில் தொடங்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதில் செய்யப்படும் தேவையற்ற தாமதம் கோவையின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும். தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இதில் கவனம் செலுத்தி கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளையும் விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...